ஜாதிச் சான்றிதழை சரிபார்க்கும் அதிகாரம் TNPSCக்கு இல்லை என்று ஐகோர்ட் கூறியுள்ளது. கடந்த 1996 97 ஆம் வருடம் டிஎன்பிசி நடத்திய குரூப் 4 தேர்வில் பங்கு பெற்று இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சராக நியமிக்கப்பட்ட கணவரை இழந்த ஜெயராணி என்பவர் கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறி பட்டியலினத்தவர் என்ற சாதிசான்றிதழ் பெற்றிருந்தார்.

பணி நியமனத்திற்காக கணவர் பெயரில் சமர்ப்பித்த சாதி சான்றிதழ் பதிலாக தந்தை பெயரில் பெற்ற சாதி சான்றிதழை சமர்ப்பிக்கும் படி டிஎன்பிஎஸ்சி உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனை எதிர்த்து ஜெயராணி தொடர்ந்த வழக்கில் TNPSCக்கு சரிபார்க்கும் அதிகாரம் இல்லை என்றும் சான்றிதழை மாவட்ட குழுவுக்கு அனுப்புமாறும் கோர்ட் உத்தரவிட்டது.