உலகம் முழுவதும் ஏராளமான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் whatsapp நிறுவனம் பயனர்களுடைய வசதிக்காக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் தற்போது புதியதாக அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பயனர்களுடன் ரகசிய போட்டோவை பகிர்வதற்கு View Once முறை அறிமுகம் செய்யப்பட்டது. இவ்வாறு, அனுப்பும் புகைப்படத்தை பயனர்கள் Screenshot எடுக்க முடியாது. அதே நேரத்தில், போட்டோவை கேலரியிலும் சேமித்து வைக்கவும் முடியாது.

அதன்பிறகு, View Once முறை மூலமாக வீடியோக்களையும் ஷேர் செய்யும்படியான அப்டேட் வழங்கப்பட்டது. இந்த அப்டேட்க்கு பயனர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, View Once முறை மூலமாக இனி நண்பர்களுடன் வாய்ஸ் மெசேஜ்களையும் ஷேர் செய்து கொள்ளலாம்.