இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது.  இந்நிலையில் இதுபோன்ற மோசடிகளை தடுப்பதற்காக AA Kredit, Amor Cash, GuayabaCash, EasyCash, Rápido Crédito உட்பட 17 போலி கடன் செயலி ஆப்களை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளது. இவை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டாலும், சில மோசடி இணையதளங்கள், மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர்கள் மூலம் பதிவிறக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது