இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த நிலையில் 18 வயதை பூர்த்தி செய்தவர்கள் மற்றும் புதிதாக ஆதார் கார்டு பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நபருக்கு இனி மாநில அரசின் ஒப்புதலுடன் உடல் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஆதார் தேவைப்படுபவர்களுக்கு பாஸ்போர்ட் போன்ற சரிபார்ப்பு அமைப்பு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் மற்றும் துணை பிரிவு மட்டங்களில் நோடல் அதிகாரிகள், கூடுதல் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று UIDAI ஆணையத்தின் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.