இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வீதம் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது பி எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கூடுதல் நிதி வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் நிதிக்காக 82 ஆயிரம் முதல் 85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்திற்கு அரசு 60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு 8000 முதல் 10 ஆயிரம் ரூபாய் கூடுதல் நிதி கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.