இந்தியாவின் பல பகுதிகளில் கோடைகாலம் தொடங்கி வெயில் சதமடித்து வரும் நிலையில், மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கப் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹரியானா மாநிலம் குருகிராமில் (Gurugram) ஓடும் ஆட்டோ ரிக்ஷா ஒன்றின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.

தீபான்ஷி (@dipanshi___19) என்ற இன்ஸ்டாகிராம் பயனர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், நீல நிற ஆட்டோ ஒன்றில் ஏசி (Air Conditioner) வசதி செய்யப்பட்டு, அது குளிர்ச்சியான காற்றை வீசும் காட்சி இடம்பெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Dipanshi 🌻 (@dipanshi___19)

“குருகிராம் முற்றிலும் புதிய உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது” என்ற வாசகத்துடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, வெயிலில் வெந்து தணியும் நெட்டிசன்களின் கவனத்தை உடனடியாக ஈர்த்துள்ளது. மேலும், அந்த ஆட்டோவின் நம்பர் பிளேட் பச்சை நிறத்தில் இருப்பதால், அது ஒரு இ-ஆட்டோ (Electric Auto) என்பதும், சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் இந்த ஏசி சிஸ்டம் மாற்றியமைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இதுதான் பொதுப் போக்குவரத்தின் எதிர்காலம்” என்றும், “இந்த ஏசி ஆட்டோக்கள் இந்தியா முழுவதும் தேவை” என்றும் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சிலர் நகைச்சுவையாக, “ஆட்டோ ஓட்டுநர் சிக்னலில் இண்டிகேட்டரை சரியாகப் பயன்படுத்துகிறார், அதுதான் ஏசியை விட பெரிய அதிசயம்” என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

குருகிராமில் உள்ள பிரபல கார்ப்பரேட் நிறுவன ஊழியர்களின் பயன்பாட்டிற்காக இந்த ஆட்டோக்கள் இயக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், இந்த புதுமையான ஆட்டோ ஜுகாட் (Jugaad) தொழில்நுட்பம் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.