
சென்னை மாநகர பேருந்துகளில் மின்னணு இயந்திரங்கள் மூலமாக டிக்கெட் எடுக்கும் முறை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சோதனை முறையில் அறிமுகமான இந்த மின்னணு இயந்திரங்களை தற்போது சென்னையில் உள்ள அனைத்து 32 டெப்போக்களிலும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த ETM இல் யு பி ஐ, பணம் மற்றும் கார்டுகளை பயன்படுத்தி பயணிகள் தங்களுடைய திட்டத்தை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் இனி சில்லறை பிரச்சனைகள் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது