விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியானது 2026 ஆம் சட்டப்பேரவை சட்டப்பேரவை தேர்தல் கருத்தில் கொண்டு ஆயத்தமாகி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களை தங்களுடைய நிர்வாக வசதிக்காக 110 ஆக பிரித்து இருக்கிறது. அதன்படி மாவட்டத்திற்கு மூன்று தொகுதிகள் வீதம் பிரிக்கப்பட்ட 110 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள்.

எந்தவித குற்ற பின்னணியும் இல்லாத விதமாக பொறுப்பாளர்களை தேர்வு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பொறுப்பாளர்கள் பற்றிய பட்டியல் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.