2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் நேரடியாக உரையாடும் வகையில் நெகிழ்ச்சியான மற்றும் அதிரடியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“வெற்றிக்குக் கிடைக்கும் பெருமை எனக்கு என்றால், இந்தத் தோல்விக்கும் தலைவனாக நானே முழுப் பொறுப்பேற்கிறேன்” எனத் துணிச்சலாக அறிவித்துள்ள அவர், தோல்வியால் முடங்கிவிடாமல் அடுத்த கட்டத்திற்கு ‘அப்டேட்’ ஆகத் தயாராகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக “உடன்பிறப்பின் குரல்” என்ற புதிய இணையதளத்தைத் தொடங்கியுள்ள ஸ்டாலின், தேர்தல் தோல்விக்கான காரணங்கள், திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் மற்றும் மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள் குறித்து வெளிப்படையாகக் கருத்துக்களைப் பகிருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வாய்ஸ் மெசேஜ் ஆகவோ, டைப் செய்தோ அல்லது காகிதத்தில் எழுதிப் புகைப்படம் எடுத்தோ எளிதாகப் பதிவிடலாம் என்றும், உங்கள் ஆலோசனைகளின் படியே திமுகவின் அடுத்த 100 ஆண்டுகாலப் பயணம் அமையும் என்றும் அவர் உருக்கமாகப் பேசியிருப்பது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன?
இனி நாம என்ன பண்ணணும்?உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன்.
🔗: https://t.co/jtdLm3hPyS pic.twitter.com/Ltg6iUgLw9
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 14, 2026
“>
