நாடு முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதில் இருந்து மின்சாரக் கட்டணம் எகிறி வருவதாகப் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், ஸ்மார்ட் மீட்டரால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர், தனது வீட்டில் இருந்த மீட்டரை ஆவேசமாக அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “இந்த மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பில் வருகிறது; இது பொதுமக்களைச் சுரண்டும் வேலை” என்று அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
स्मार्ट मीटर से परेशान युवती ने तोड़ा मीटर
युवती का कहना है कि, जब से ये मीटर लगा है बिजली बिल ज़्यादा आ रही है ।
लोग इतना विरोध कर रहे है लेकिन सरकार इस पर विचार करने का नाम ही नहीं ले रही है।
आम मानुष को इस मीटर के लगने से कठिनाई का सामना करना पड़ रहा है। pic.twitter.com/gq8HzFLdwd
— AmīT Yaḍav (@Amityadav_7272) April 23, 2026
ஸ்மார்ட் மீட்டர்களுக்கு எதிராகப் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தாலும், அரசு இது குறித்து எந்தவொரு ஆலோசனையோ அல்லது மாற்றமோ செய்ய முன்வரவில்லை என்பதே சாமானிய மக்களின் மிகப்பெரிய வேதனையாக உள்ளது. ஒரு பக்கம் விலைவாசி உயர்வு, மறுபக்கம் மின்சார பில் என இரட்டை நெருக்கடியில் சிக்கியுள்ள சாமானிய மனிதர்களுக்கு, இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டம் பெரும் சுமையாக மாறியுள்ளது. இந்தத் துணிச்சலான இளம்பெண்ணின் செயல் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
