‘Bureau of Indian Standards’  தேசிய அளவிலான வினாடி வினா போட்டியை நடத்துகின்றது. இந்த போட்டி தரம் மற்றும் தரநிலைகள் பற்றிய பொது அறிவு சரிபார்க்க BIS ஆல் நடத்தப்படுகின்றது. இது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. 20 வினாக்களுக்கு 10 நிமிடங்களில் விடை அளிக்க வேண்டும். முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக ஐந்தாயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 3000 ரூபாய் வழங்கப்படும். அதேசமயம் 47 பேருக்கு ஊக்கத்தொகையாக 2000 ரூபாய் வழங்கப்படும். இது பற்றிய கூடுதல் விவரங்களை www.mygov.in  என்ற இணையதளத்தில் அறியலாம்.