தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமை வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில், தற்போதைய அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர்கள் சிலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் முக்கிய முகங்களாகக் கருதப்பட்ட பின்வரும் அமைச்சர்கள் இந்த முறை வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. அதன்படி

பொன்முடி

மனோ தங்கராஜ்

ஆர். காந்தி

கயல்விழி செல்வராஜ்.

கடந்த 2016 மற்றும் 2021 தேர்தல்களில் மனோ தங்கராஜ் வெற்றி பெற்ற குமரி மாவட்டத்தின் பத்மநாபபுரம் தொகுதி, இந்த முறை கூட்டணி கட்சியான சிபிஎம் (CPM) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், அவர்களின் வாரிசுகளுக்கு அதே தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருக்கோவிலூர்: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்குப் பதில் அவரது மகன் கௌதம சிகாமணி களம் இறக்கப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை: அமைச்சர் ஆர். காந்திக்குப் பதில் அவரது மகன் வினோத் காந்தி போட்டியிடுகிறார்.

அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் தொகுதியில் நிலவும் எதிர்ப்புகளைக் கணக்கில் கொண்டு திமுக தலைமை இந்த அதிரடி மாற்றங்களைச் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.