உக்ரைன், ரஷ்யா போரானது கடந்த 11 மாதங்களை தாண்டி நீடித்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா தன்னுடைய படையெடுப்பை நிறுத்தவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்கெய் லாவ்ரோவ் எரித்யா நகரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர்  அமெரிக்காவை சாடி பேசி உள்ளார். அதாவது பன்முகத்தன்மை கொண்ட உலகை நிறுவுவது என்பது ஒரு செயல் நோக்கம் மற்றும் தடுத்து நிறுத்த முடியாத நடைமுறையாக இருக்கும். அமெரிக்காவால் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட, தற்போது நோட்டா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இணைந்த மேற்கத்திய நாடுகள் இந்த நடைமுறையை தலைகீழாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் பயனில்லாமல் போகும் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அறிவுரை தருவதற்காக வரக்கூடிய எந்த நாட்டுத் தலைவர்களின் பயணமோ அல்லது மேற்கத்திய நாடுகளின் ராணுவம் மற்றும் ராணுவம் அல்லாத போர்களும் பொருளாதார ஆற்றல் நிதி மற்றும் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்த வல்ல புதிய மையங்கள்  உருவாக்குவதில் இருந்து அவற்றின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது. சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் முன்பே பலவிதமாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்கள் ஆகிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.