ஜெருசலேமில் பாலஸ்தீனிய சிறுவன் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தந்தை மகன் இருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையான மோதல் பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேமில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தந்தை மற்றும் மகன் இருவர் பலத்த காயமடைந்தார்கள்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற பாதுகாப்பு படையினர், காயமடைந்த தந்தை மகன் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். தாக்குதலை நடத்திய 13 வயதுடைய சிறுவன், இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளிடையே சண்டை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், சிறுவனால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.