பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதால் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. அதாவது அமெரிக்க டாலர் பாகிஸ்தான் ரூபாயில் ரூ.262.6 ரூபாயாக  உள்ளது. இந்த ரூபாய் வீழ்ச்சியின் காரணமாக உலக வங்கி உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளிடம் பாகிஸ்தான் கடன் வாங்க முயற்சி செய்துள்ளது. இந்த ரூபாயின் வீழ்ச்சி பாகிஸ்தானின் பொருளாதாரத்தை மேலும் பின் நோக்கி இழுத்துச் சென்றுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் மக்கள் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.