தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் அடுத்ததாக ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கார் மற்றும் பைக் ரேஸ் அதிக ஆர்வம் கொண்ட இவர் தற்போது சர்வதேச அளவில் பைக் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் தன்னுடன் பயணித்த சுகத் என்ற பைக்கருக்கு நடிகர் அஜித் BMW F850 GS என்ற பைக்கை பரிசாக அளித்துள்ளார். இந்த பைக்கின் விலை சுமார் 15 லட்சமாகும். இது குறித்து கூறிய சுகத், பெரிய அளவிலான புகழ் இருந்தாலும் அவர் பணிவாக இருந்ததை கண்டு வியந்தேன். சூப்பர் ஸ்டாருக்கு பின்னால் ஒரு அழகிய எளிய மனிதர் இருக்கிறார்”என்று புகழாரம் சூட்டினார்.