மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் தற்போது “உயிருக்கு ஆபத்தான நிலையில்” இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் புதிய முன்மொழிவுகளை அமெரிக்கா நிராகரித்த நிலையில், டிரம்ப் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனால் உலக சந்தையில் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், போர் மீண்டும் தொடங்கும் அபாயம் அதிகரித்துள்ளது. ஈரானின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்று கூறிய டிரம்ப், இந்தப் போரில் அமெரிக்கா முழு வெற்றி பெறும் என்று உறுதியாகத் தெரிவித்தார்.
“ஒரு நோயாளி பிழைக்க 1 சதவீத வாய்ப்பு மட்டுமே இருப்பதாக மருத்துவர் கூறுவது போன்ற நிலையில்தான் இந்த போர் நிறுத்தம் உள்ளது” என அவர் கவலையோடு தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், தனது நாடு எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
