இந்தியாவில் தங்க நகைகள் உட்பட பல பொருள்களுக்கு ஐஏஎஸ் முத்திரை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது துருப்பிடிக்காத எஃகு மற்றும் அலுமினிய சமையல் பாத்திரங்களில் ஐஏஎஸ் முத்திரையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. பொருள்களின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து நுகர்வோருக்கு உறுதி அளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஐஏஎஸ் முத்திரை இல்லாத கொள்கலன்களின் உற்பத்தி, ஏற்றுமதி, விற்பனை மற்றும் சேமிப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். இது தரநிலைகள் மற்றும் வடிவமைப்பு விவரம் ஆகியவற்றை உள்ளடக்கியது என தெளிவுபடுத்தியுள்ளது.
