அயோத்தி ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு, வரும் 22ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை ஒட்டி மத்திய அரசு நிறுவனங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணியாளர்களுக்கு பிற்பகல் 2.30 மணி வரை விடுமுறை விடப்பட்டாலும், அவசர மருத்துவ சேவைகள் வழக்கம் போல் தொடரும் என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.