
வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில் இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டு பிரதமர் சேக் ஹசீனா அழைப்பு விடுத்திருந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து நேற்றும் இன்றும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இவர்களை எதிர்த்து ஆளும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் காவல்துறையினர் தடுக்க முயன்றனர். இவர்கள் மீது மாணவர்கள் கற்களை வீசியதால் தடியடி நடத்தும் சூழல் உருவானது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு வணிக வளாகத்திற்கு தீ வைத்தனர். இந்த கலவரத்தில் இதுவரை 91 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வங்காளதேசத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மறு அறிவிப்பு வரும் வரை வங்கதேசத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என மத்திய அரசு கூறியுள்ளார்.