
மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்மானது சிறப்பு திருமண சட்டத்தின் மூலமாக இந்து- இஸ்லாமியர்கள் இடையே நடக்கும் திருமணமானது முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது. இஸ்லாமியத்தைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே கலப்பு திருமணத்தை பதிவு செய்து போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த மனுவை ஏற்காத நீதிமன்றம் முஸ்லிம் சட்டத்தின் கீழ் இது ஒழுங்கற்ற திருமணமாக கருதப்படும் என்று கருத்து தெரிவித்துள்ளது.