2026 ஆம் ஆண்டு ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஆட்டத்தில், பாகிஸ்தான் வீரர்களின் மோசமான ஃபீல்டிங் சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகியுள்ளது.

இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து இரண்டு முறை கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்டு ‘மறுவாழ்வு’ அளித்தனர். மிகவும் எளிதான இந்த வாய்ப்புகளை பாகிஸ்தான் வீரர்கள் நழுவவிட்டது, அந்நாட்டு கிரிக்கெட்டின் ‘வழக்கமான’ சொதப்பலான ஃபீல்டிங்கை மீண்டும் ஒருமுறை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

“>

இந்த ஆட்டத்தின் முக்கியமான தருணத்தில் சூர்யவன்ஷி கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை பாகிஸ்தான் ஃபீல்டர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டும், கவனக்குறைவாகவும் தவறவிட்டது இந்திய அணிக்கு பெரும் சாதகமாக அமைந்தது.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், “பாகிஸ்தான் ஃபீல்டிங் எப்போதுமே மாறாது” என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். இந்த தொடர்ச்சியான தவறுகள் பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பை பாதித்ததோடு, இந்திய அணியின் ஸ்கோர் உயர்வதற்கும் முக்கிய காரணமாக அமைந்தது.