இந்தியாவுடனான ரஷியாவின் உறவுகள் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று, சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஷெபாஸ் ஷெரீப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார்.
அப்போது, “டெல்லியுடனான மாஸ்கோவின் உறவை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும், அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் ஷெபாஸ் ஷெரீப் புதினிடம் கூறியுள்ளார். மேலும், “நாங்கள் ரஷ்யாவுடன் வலுவான நட்பு உறவுகளை விரும்புகிறோம். இந்த உறவு இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும், செழிப்பிற்கும் நல்ல பலன் அளிக்கும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு, சீனாவின் ஏற்பாட்டில் நடைபெறும் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோல்வியடைந்த 80வது ஆண்டு நினைவு நிகழ்வில் இராணுவ அணிவகுப்பை முன்னிட்டு பெய்ஜிங்கில் இருவரும் கலந்துகொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா இடையிலான உறவுகள் மேம்படும் நிலையில், இந்தியாவுடனான ரஷ்ய உறவை பாகிஸ்தான் எதிர்க்கவில்லை என்பது சமரசம் கொண்ட அரசியல் எண்ணமாக கருதப்படுகிறது.