சம்பளம் மட்டுமே ஒரு மனிதனை வெளிநாடு நோக்கி நகர வைப்பதில்லை, அதைத் தாண்டி அமைதியான வாழ்க்கையும் ஒரு முக்கியக் காரணம் என்பதை விளக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

லண்டனில் மென்பொருள் ஊழியர்களாகப் பணிபுரியும் இந்திய இளைஞர்கள், மாலை 5 மணிக்கே அலுவலக வேலைகளை முடித்துவிட்டு, கடற்கரை ஓரம் சுகமாகக் காற்று வாங்கிக் கொண்டே உலா வரும் காட்சிகளைப் பதிவிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில் பேசியுள்ள இளைஞர் ஒருவர், இந்தியாவில் இருந்தபோது ஒரு கழுதையைப் போலத் ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்ததாகவும், ஆனால் லண்டனில் தான் உண்மையான ‘வொர்க் லைஃப் பேலன்ஸ்’ (Work-Life Balance) என்னவென்று உணர்வதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சினிமாவை விட மிக அழகாக இருக்கும் தங்களது இந்த வாழ்க்கை அனுபவத்தை அவர் பகிர, இந்திய நெட்டிசன்கள் பலரும் ஏக்கத்தோடும், கொஞ்சம் பொறாமையோடும் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.