2025 ஆசியக் கோப்பை பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அனைத்து சர்ச்சைகள் மற்றும் புறக்கணிப்பு அழைப்புகளையும் மீறி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்றாவது முறையாக மோதவுள்ளன.

இரு அணிகளும்  சூப்பர்-4 சுற்றும் தகுதிச்சுற்றுகளை வென்ற பிறகு இப்போது ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) துபாய் சர்வதேச மைதானத்தில் இறுதிப் போட்டிக்கு மோதுகின்றனர்.

வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் பாகிஸ்தான்  வங்கதேசத்தை 11 ரன்கள் வித்தியாசத்தில் விழ்த்தி இறுதிக்கு சென்று சல்மான் அலி அகா தலைமையில் 135/8 என்ற குறைந்த ரன்களை வைத்து கட்டி காப்பாத்தி  வெற்றி பெற்றது; வெற்றியில் ஸ்டார்கள் ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவூஃப் முக்கிய விக்கெட் வீழ்த்தியதில்  வெற்றிக்கு வழிவகுத்தனர்.

வெற்றிக்குப் பிறகு ஹாரிஸ் ரவூஃப் மைதானத்திலிருந்த பாகிஸ்தான் ரசிகர்களுடன் கைகுலுக்க சென்ற போது, உணர்ச்சிவசப்பட்ட ஒரு ரசிகர்,   “நாம் பழிவாங்க வேண்டும், இந்தியாவை தோற்கடிக்கவேண்டும், கடவுள் மீதும் சத்தியமாகக் கூறுங்கள்” என என கண்ணீர் மல்க  உருக்கமாக கேட்டார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி, போட்டிக்கு முந்தைய உச்சமான பதற்றத்தையும் ரசிகர்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. அந்த ரசிகரிடம் ஹாரிஸ் சிறு புன்னகையுடன் பறக்கும் முத்தங்களை ஊதிவிட்டு அமைதியாக திரும்பிச் சென்ற காட்சி, பலரிடமும் கவனத்தை ஈர்த்துள்ளது.

“>

 

ஆனால் ஹாரிஸ் ரவூஃப்பின் முந்தைய நடத்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தியா – பாகிஸ்தான் சூப்பர் ஃ 4 போட்டியில், ஹாரிஸ் சில ஆட்சேபனைக் கூச்சல்களை விட்டதோடு, ரசிகர்களை நோக்கி பரபரப்பான சைகைகளும் செய்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு, உலகக் கோப்பை போட்டியின்போது எம்சிஜி மைதானத்தில் விராட் கோலியின் சிக்ஸர்களுக்கு பதிலடியாக, இந்திய விமானத்தை வீழ்த்தும் போலியான சைகையை அவர் செய்திருந்தது சர்ச்சையை கிளப்பியது.

சமீபத்திய போட்டியில் சாஹிப்சாடா ஃபரூக், துப்பாக்கிச் சூட்டு சைகை செய்து கொண்டாடியதும் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்நிலையில், இந்த இறுதிப் போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.