2025 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், பாகிஸ்தான் ஜாம்பவான் ஷோயிப் அக்தர் ஒரு தெளிவான வெற்றி யுக்தியை வெளியிட்டுள்ளார்.

வரும் இறுதியில் போட்டியில்  (செப்.28, துபாய்) இந்தியா—பாகிஸ்தான் மோதவிருக்கும்போது, இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தலைமையில் உருவான மனநிலையை அல்லது ‘ஆராவை’ உடைக்க வேண்டும் என்று  அக்தர் கோரியுள்ளார். அவனுடைய கருத்து: “ வீர்ரகளே நீங்கள் இந்த மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள்; அவர்களின் ஆராவை ஒதுக்கி வைக்கவும்; அதனை ஒளி குன்றவிடுங்கள்” என்று  தெரிவித்துள்ளார்.

மேலும் அக்தர் தனது பேச்சில் தெளிவாக உத்தி வகுத்தார் — “வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நீங்கள் காட்டிய மனநிலையுடன் விளையாடுங்கள். 20 ஓவர்கள் முழுதும் பந்து வீச வேண்டிய அவசியமில்லை; ஆரம்பத்தில் விக்கெட்டுகளைப் விழ்த்துங்கள் அது  போதும்.” என கூறினார்,

முக்கியமாக தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மீது கவனம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். அக்தரின் எண்ணம்: அபிஷேக்யை அடிக்க விடாமல்  ஆரம்ப ஓவர்களில் நீக்கினால், இந்தியாவின் தொடக்க ரன்-அடிப்படை சீர்குலைவை  சந்திக்க வேண்டியிருக்கும்; அதுவே இந்திய அணிக்கு மனச்சோர்வு கொடுத்துவிடும்.

மேலும் மனதில் வைத்து கொள்ளுங்கள் : “என் வார்த்தைகளை கவனியுங்கள் — அபிஷேக் சர்மா முதல் இரண்டு ஓவர்களில் அவுட் ஆனால், இந்தியா சிக்கலில் விழும். அவர் அவுட் ஆகாமல் நின்றால் சவால் கடினம். நீங்கள் (பாகிஸ்தான்) போராட  வேண்டும்;

அவர்கள்  மனநிலையை பொறுத்துதான் ரன்கள் கிடைக்கும்.” அதை  நினைவில் வைத்து , பாகிஸ்தான் வீரர்கள் ஆரம்பத்திலேயே ஆற்றலைக் கையாண்டு, வேகப்பந்துவீச்சில் மிகுந்த அழுத்தத்தை உருவாக்கி, இந்தியா எதிர்க்கொள்ள முடியாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என அக்தர் ஆலோசித்து கூறினார்.

இவற்றை ஒரு சவாலாகவும், ஒரு திட்டமாகவும் எடுத்துக்கொள்ளும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அக்தரின் பேச்சு பெரும் உற்சாகத்தையும் நம்பகத்தன்மையையும் கொடுத்துள்ளது.

“நீங்கள் மோசமாக  ஆட்டத்தை தொடங்கலாம்; ஆனாலும் இறுதிக்கு வந்தபோது சிறந்த கிரிக்கெட்டையே விளையாட  வேண்டும் ” என்று , அக்தர் தனது அனுபவத்தையும் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் காலத்தை நினைவுகூர்ந்தும் கஅணிக்கு  ஆதரவு அளித்துள்ளார்.

எல்லாம் ஒரு புறம் இருக்க இறுதி  ஆட்டம்  தொடங்கும்போது கூறிய  இந்த உத்திகள் எவ்வளவு செயல்படும்  என்பதை எதிர்பார்த்து ரசிகர்கள்  உள்ளனர்.