இந்திய அணியிடம் 2025 ஆசியக் கோப்பை தொடரில் கடும் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு நட்சத்திரம் ஷாஹீன் அப்ரிடி மீது, அவரது  மாமனார் மற்றும்  முன்னாள் கேப்டனுமான ஷாஹித் அப்ரிடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் பேசிய ஷாஹித் அப்ரிடி, “ஷாஹீன் ரன்கள் எடுத்ததற்கு நன்றி, ஆனால் எனக்கு அவரிடமிருந்து ரன்கள் தேவையில்லை, பந்துவீச்சில் செயல்திறன் வேண்டும். அவர் ஒரு பந்துவீச்சாளர். ஆரம்ப பந்துகளை ஸ்விங் செய்யும் திறமை அவரிடம் இருக்கிறது.

அதனால்தான் அவர் பாகிஸ்தானுக்காக ஆடுகிறார். அவர் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். பந்தை முன்னோக்கி நகர்த்தி தடுமாற வைக்கும் திறமை அவரிடம் இருக்க வேண்டும்” என்று விளக்கம் அளித்தார்.

“>

இந்தியா–பாகிஸ்தான் போட்டியில், ஷாஹீன் அப்ரிடி 16 பந்துகளில் 33 ரன்கள் எடுத்துப் பாகிஸ்தான் அணி 127 ரன்களை எட்ட உதவினார். ஆனால், பந்துவீச்சில் அவர்கள் ஒருபோதும் எதிரிகளை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அபிஷேக் ஷர்மா தனது முதல் பந்திலேயே பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்து ஷாஹீனை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

ஷாஹீன் 2 ஓவர்களில் 23 ரன்கள் கொடுத்தும் ஒரு விக்கெட் கூட பெற முடியாமல் இருந்தது பாகிஸ்தானுக்கு கடும் பின்னடைவாக அமைந்தது. இதனால்தான், அவரது பந்துவீச்சு குறித்து மருமாமனிடம் அதிருப்தி வெளியிட்டார் ஷாஹித் அப்ரிடி.

இந்திய அணியிடம் பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. போட்டியின் எந்த பாகிஸ்தான் பேட்ஸ்மேனும் சிறப்பாக விளையாடவில்லை. அதேபோல், பந்து வீச்சாளர்களும் களத்தில் சரியான தாக்கத்தை  ஏற்படுத்த முடியாமல் இருந்தனர்.

ஷாஹீன் அப்ரிடி போன்ற முக்கிய வீரர்கள் தங்களுக்கான பங்களிப்பை வழங்க தவறியதால்தான், பாகிஸ்தான் முழுமையாக தோல்வியடைந்தது என விமர்சனம் எழுந்துள்ளது. தற்போது பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுத் துறையில் மாற்றம் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.