பாரதிய ஜனதா கட்சி திருவண்ணாமலை வேட்பாளர் அஸ்வத்காமனை ஆதரித்து நடிகர் கூல் சுரேஷ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், உங்களுக்கெல்லாம் தெரியும் நான் பிக் பாஸ்க்கு போயிட்டு வந்த கூல் சுரேஷ். நான் பிக் பாஸ் கூல் சுரேஷ் ஆக இருக்கலாம். ஆனால் இந்தியாவுக்கே பிக் பாஸ் மோடி ஐயா தான் என்று கூறினார். அப்போது பெண்மணி ஒருவர் அவருக்கு டீ போட்டுக் கொடுத்தார். அதனை வாங்கிய அவர், வெந்து தணிந்தது காடு டீக்கு ஒரு வணக்கத்தை போடு என்று அவரது டயலாக்கை கூறினார். மேலும் இந்த டீ பார்ப்பதற்கு தாமரை போல் அழகாக உள்ளதாகவும் கூறினார்.