வங்கதேசத்தில் நடைபெற்று வரும் பிபிஎல் (BPL) டி20 தொடரில், இந்தியத் தொகுப்பாளர் ரிதிமா பதக் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். முன்னதாக, ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ரூ. 9.20 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) உத்தரவின் பேரில் அந்த அணி விடுவித்தது. இதற்குப் பதிலடியாக, வங்கதேச கிரிக்கெட் வாரியம் ரிதிமாவை நீக்கியதோடு, அந்நாட்டில் ஐபிஎல் ஒளிபரப்பிற்கும் தடை விதித்துள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை போட்டிகளை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அதிரடியாக நிராகரித்துள்ளது. இந்தியா வர மறுத்தால் புள்ளிகளை இழக்க நேரிடும் என ஐசிசி எச்சரித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
