இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் மொத்த விலை பணவீக்கம் 5.85 ஆக இருந்தது. இந்த பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் 4.95 ஆக குறைந்துள்ளது. இது 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் பொருளாதார சரிவுக்கு பேப்பர், பேப்பர் பொருட்கள், ரசாயன பொருட்கள், ரசாயனங்கள், துணி வகைகள், உலோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றின் விலை நவம்பர் மாதத்தை விட கடந்த மாதம் குறைந்தது தான் காரணம் என்று கூறப்படுகிறது.