இந்தியாவில் பிப்ரவரி மாதம் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இந்த பட்ஜெட் தொடர்பான எதிர்பார்ப்பு பொதுமக்கள், பல்வேறு துறையினரை சார்ந்தவர்கள், விவசாயிகள் என பலரது மத்தியிலும் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் சார்பாக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். நான் என்னை அடையாளப்படுத்தும்போது எப்போதும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவளாகவே அடையாளப்படுத்திக் கொள்வேன்.

அவர்களுடைய பிரச்சினைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதன் பிறகு மத்திய அரசு ஒரு வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் குடும்பத்தினருக்கு வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிதாக எந்த வரியையும் விதிக்க போவது கிடையாது. அதன் பிறகு மத்திய அரசு பொலிவுறு நகரங்களை உருவாக்குவதிலும் மெட்ரோ ரயில் நிலையங்களை உருவாக்குவதிலும் தான் தீவிரம் காட்டி வருகிறது. இவை அனைத்துமே நடுத்தர வருடத்தினருடன் தொடர்புடையவை. மேலும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் வேலைக்கு செல்லவும் வேலை தேடி எளிதாக செல்லவும் நாட்டில் 27 இடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் உழைப்பில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று கூறினார் ‌