இந்தியாவில் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

உலக வங்கி-இந்தியா அறிக்கையின்படி, இந்தியா சுதந்திரம் அடைந்த போது, ஒன்பது சதவீதம் பேர் மட்டுமே இந்தியாவில் எழுத்தறிவு பெற்றிருந்தார்கள். அதில் 11 பெண்களில் ஒரு பெண் மட்டுமே கல்வியறிவு பெற்றிருந்தார்கள். இந்நிலையில் தற்போது, பெண்களின் கல்வியறிவு விகிதம் 77% ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 84.7% ஆக உள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அறிக்கையின் படி, நாட்டிலேயே 92.2% கல்வியறிவு பெற்ற மாநிலமாக கேரளா திகழ்கிறது. அதைத் தொடர்ந்து ஒன்றியப் பிரதேசமான லட்சத்தீவு (91.85%) உள்ளது.