தலைநகர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் பல்வேறு இடங்கள் பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஜனாதிபதி மாளிகையில் அமைந்துள்ள முக்கிய இடமான தோட்டம் செவ்வகம், நீளம், வட்டம் என மூன்று வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த தோட்டத்தில் பலவகையான பூக்கள் மற்றும் செடிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றது.

இந்த தோட்டத்திற்கு முகல் தோட்டம் என்று பெயரிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அம்ரித் உதயன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த  ஜனவரி 31ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை பொதுமக்கள் இங்கு பார்வைக்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. எனவே ஜனாதிபதி மாளிகையை பார்வையிட இன்றே கடைசி நாள் ஆகும்.