நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளை அகற்றி ஜிபிஎஸ் அடிப்படையில் ஆன கட்டண வசூலை செயல்படுத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூலை இயக்க அனைத்து வாகனங்களுக்கும் gps இருப்பது அவசியமாகும். அரசு திட்டமிட்டுள்ளபடி இது மூன்றாம் தலைமுறை மற்றும் ஜிபிஎஸ் இணைப்புடன் கூடிய மைக்ரோ கண்ட்ரோலரின் உபகரணங்களின் மூலம் இயங்கக்கூடியது. இந்த ஜிபிஎஸ் மூலம் வாகனங்கள் எங்கு செல்கிறது, எத்தனை டோல்கேட்டுகளை கடந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.