இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டை பற்றி அனைவரும் தெரிந்து இருப்போம்.

ஆனால் அதுவே நீல நிற ஆதார் அட்டை என்றால் என்ன தெரியுமா? இது ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பயோமெட்ரிக் தரவுகளை வழங்க தேவையில்லை. அதற்கு மாறாக மக்கள் தொகை தரவு மற்றும் பெற்றோரின் ஆதார் எண்ணை குறிப்பிட்டேன் நீலநிற ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு uidai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.