
வெளிநாடுகளுக்கு சென்று திருமணம் செய்யும் பழக்கத்தை தவிர்த்து இந்தியாவிலேயே திருமணம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும். அதன் மூலமாக நாட்டினுடைய செல்வமும் வெளியே போகாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருமணம் குறித்து பேசிய பிரதமர் மோடி, வெளிநாடுகளுக்கு சென்று தற்போது திருமணம் செய்வது பிரபலமாகி வருகிறது. அவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்று திருமணத்தை நடத்துவது பொருத்தமாக இருக்குமா? இதனால் இந்தியாவின் வளம் எந்த அளவுக்கு வெளியே செல்கிறது.
நம்முடைய நாட்டிலேயே திருமணங்கள் நடத்த முடியாதா? இவ்வாறு வெளிநாட்டுக்கு சென்று திருமணத்தை நடத்தும் வியாதி உங்களுடைய சமூகத்திலும் நுழையாத விதமாக சூழலை உருவாக்க வேண்டும். எனவே இந்தியாவில் தயாரிப்பு இயக்கம் மூலம் உள்நாட்டிலேயே உற்பத்தி ஊக்குவிப்பது போன்று இந்தியாவிலேயே திருமணம் என்ற பழக்கத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.