இந்தியாவில் இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள நிலையில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் மூலம் பெறப்படும் ஓய்வூதியத் தொகை உயர்த்துவது குறித்து அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைப்புசாரா துறையுடன் தொடர்புடைய ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் சார்பாக ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்ச ஐந்தாயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் அடல் ஓய்வூதியத்தின் கீழ் தரப்படும் அதிகபட்ச தொகை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 7000 ரூபாயாக உயர்த்தலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அதிகபட்ச ஓய்வூதியத் தொகை 7000 ரூபாயாக உயர்த்தப்பட்டால் கிட்டத்தட்ட 5.3 கோடிக்கும் அதிகமான பங்குதாரர்கள் பயன்பெற முடியும்.