தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து சினிமாவை விட்டு விலகி தீவிர அரசியலில் ஈடுபடுவதாகவும் அவர் கூறி இருந்தார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து ஒரே ஒரு திரைப்படத்துடன் சினிமாவை விட்டு விலகுகின்றார். அதனால் அவருடைய கடைசி படம் குறித்த தகவலை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். விஜய்யின் கடைசி படத்தை வெற்றிமாறன், ஹெச். வினோத் ஆகியோர் இயக்கப் போவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் தற்போது ஜிஎஸ்டி உடன் சேர்த்து 150 கோடிகள் சம்பளம் பெற்று வரும் நிலையில் GOAT படத்தில் இது 200 கோடிகளாக உயர்ந்தது. அவரது கடைசி திரைப்படத்திற்கு 250 கோடிகள் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது உண்மையாகும் பட்சத்தில் இந்திய திரை உலகில் அதிக சம்பளம் பெற்ற நடிகர் என்ற பெருமையை விஜய் அடைவார். நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர் உட்பட எந்த இந்திய திரையுலக பிரபலமும் 250 கோடிகளை சம்பளமாக பெறவில்லை என்ற நிலையில் விஜய் பெற்றால் இது ஒரு சாதனையாக இருக்கும்.