தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்த அமலா பால், இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு, பின் விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பின்னர் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட அமலா பால் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அவர், தான் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாக உள்ளதாக பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.