ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்யூ ஹெய்டன், மைதானத்தில் சிதறிக்கிடந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளைத் தானே முன்வந்து அள்ளிய வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, வீரர்கள் அமரும் டக்-அவுட் (Dugout) மற்றும் எல்லைக் கோட்டிற்கு அருகே கிடந்த குப்பைகளை ஹெய்டன் அமைதியாகச் சேகரித்து குப்பைத் தொட்டியில் போட்டார்.
54 வயதான ஒரு சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான் இத்தகைய செயலைச் செய்தது ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ள போதிலும், இது இந்தியர்களிடையே ஒரு பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
What a shame man.
A foreign coach has to teach us basic civic sense. You guys are cricketers, at least have the basic sense of where to throw garbage. Will the coach have to teach that too now?pic.twitter.com/tOyEqDzOLb— 𝚅𝚊𝚛𝚞𝚗¹⁸ (@varunx18) April 2, 2026
“>
“ஒரு வெளிநாட்டுப் பயிற்சியாளர் வந்துதான் நமக்கு அடிப்படைச் சுகாதாரத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா? இது நமக்குக் கிடைத்த அவமானம்” என்று நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் குஜராத் அணி வீரர்களையும், அங்குள்ள நிர்வாகத்தையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
