பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL 2026) தொடரில் லாகூரில் நேற்று நடைபெறவிருந்த லாகூர் கலந்தர்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், பலத்த மழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
லாகூர் கடாபி மைதானத்தில் பெய்த கனமழையால் ஆடுகளம் முழுவதும் தண்ணீர் தேங்கி குட்டை போல் காட்சியளித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பிஎஸ்எல் தொடரின் தரத்தை மற்ற டி20 லீக்குகளுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாகக் கிண்டல் செய்து வருகின்றனர்.
The condition of outfield right now. pic.twitter.com/qRgE8hzJwN
— Sheri. (@CallMeSheri1_) April 3, 2026
“>
இரவு 7 மணிக்குத் தொடங்க வேண்டிய டாஸ் மழையால் தள்ளிப்போனதால், ஆட்டம் 13 ஓவர்களாகக் குறைக்கப்பட்டதோடு, மைதானத்தைப் போட்டிக்குத் தயார் செய்ய ஊழியர்கள் பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது.
அதுமட்டுமின்றி, நேரலை ஒளிபரப்பின் போது வர்ணனையாளர்கள் மற்றும் வீரர்கள் மழையில் நனைந்தபடி குடையைப் பகிர்ந்து கொண்ட காட்சிகள், தொடரின் மோசமான திட்டமிடலை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
