2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் மகுடத்தைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நாளை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன.
இந்த மைதானத்தின் ஆடுகளம் சிவப்பு மற்றும் கருப்பு மண் கலந்தது என்பதால், ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாகவும், பின்னர் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவிக்க ஏதுவாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இங்கு நடந்த போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளதால், இந்த இறுதிப் போட்டியும் ஒரு பெரிய ரன் வேட்டையாக இருக்கும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
போட்டிக்கு முன்னதாகப் பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சான்ட்னர், இந்திய அணியின் வலிமையைத் தாங்கள் அறிவோம் என்றும், ஆனால் உலகக்கோப்பையை வெல்ல இந்திய ரசிகர்களின் இதயங்களை உடைக்க வேண்டியிருந்தாலும் அதற்குத் தயார் என்றும் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் “இந்திய ரசிகர்களை அமைதிப்படுத்துவதே எங்கள் இலக்கு” என்று கூறிய அதே பாணியில் சான்ட்னர் பேசியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
களத்தில் சிறு சிறு விஷயங்களைச் சரியாகச் செய்து, ஒரு அணியாகச் செயல்பட்டு கோப்பையைக் கைப்பற்றுவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
