கரப்பான் பூச்சி என்றாலே அதை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்கள் நினைப்பார்கள். அப்படி கொரியாவைச் சேர்ந்த ஒரு பெண் கரப்பான் பூச்சியை அழிக்க நினைத்து முழு அப்பார்ட்மெண்ட்டை நிலைகுலையச் செய்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, தனது வீட்டில் கரப்பான் பூச்சியைப் பார்த்த அந்தப் பெண், அதை கொல்வதற்காக அதன் மீது எரிந்தன்மை கொண்ட ஸ்ப்ரேயைத் தெளித்து, பின்னர் லைட்டரால் தீ வைத்தார். தீ பிடித்த கரப்பான் பூச்சி மற்ற இடங்களுக்குச் சென்றதால், அப்பார்ட்மெண்ட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் நெருப்பு சூழ்ந்தன.
இந்தத் தீ அருகிலுள்ள குடியிருப்புகளுக்கும் பரவி பெரிய விபத்தாக மாறியது. இதைப் பார்த்து பயந்து போன ஐந்தாவது தளத்தைச் சேர்ந்த ஒரு பெண், கீழே குதித்தார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் தீயாலும் புகையாலும் எட்டு பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.இதைத் தொடர்ந்து, இந்த விபத்துக்கு காரணமான பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
