போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வீடியோக்களை வெளியிடக் கூடாது என சமூகவலைதள Influencer-களுக்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன் ஐபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், Food Vlogல் போதை பழக்கத்தை சகஜமாக்கும் வகையில் இந்த வீடியோ இருப்பதாக X தளத்தில் ஒருவர் பதிவிட்டார்.

மேலும் அந்த வீடியோவை நீக்கவும் கேட்டுக்கொண்டார். மேலும், சமூக வலைதள பிரபலங்கள் இதை மீறி போதை பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வீடியோ பதிவு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.