உத்தரப்பிரதேச மாநிலம் ஹரதோய் நகரில் உள்ள சினிமா சுரங்கம் சாலை சந்திப்பில் கனமழை பொழிந்தபோதிலும், போக்குவரத்தை சீராக்கும் பொறுப்புடன் ஒரே மனதுடன் தன்னால் முடிந்தவரை தனது கடமையை நிறைவேற்றியுள்ளார் போக்குவரத்து காவல்துறையைச் சேர்ந்த தலைமை கான்ஸ்டபிள்.
கடமையை மறக்காமல் தனியாகவே போக்குவரத்தை கட்டுப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து, அவருடைய பொறுப்புணர்வுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
हरदोई शहर के सिनेमा चौराहे पर तैनात ट्रैफिक पुलिस के हेड कांस्टेबल ने भारी बारिश के बीच अकेले मोर्चा संभाला और ट्रैफिक नियंत्रित किया। बारिश में भी अपने कर्तव्य पर डटे रहने के लिए हेड कांस्टेबल की कर्तव्यनिष्ठा की प्रशंसा हो रही है.#UttarPradesh pic.twitter.com/C8bQyymRuj
— NBT Hindi News (@NavbharatTimes) August 26, 2025
“>
கனமழையில் முழுக்க ஈரமாக இருந்தபோதிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், இடையே நின்று சைகை மூலம் வாகனங்களை வழிநடத்திய அவரது சேவை, காவல் துறையின் பொறுப்புடைமை மற்றும் நேர்த்தி எப்படியிருக்க வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள், “இதே போல ஒவ்வொருவரும் தங்கள் பணியில் முழுமையாக அர்ப்பணித்து செயல்பட்டால் தான் நாட்டு முன்னேற்றம் சாத்தியம்” எனக் கூறி, அந்த தலைமை கான்ஸ்டபிளின் சேவையை புகழ்ந்து வருகின்றனர்.
