வருகிற 27-ஆம் தேதி வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்துள்ளார். அங்குள்ள திமாபூர் நகருக்கு அருகே நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அவர் உரையாற்றிய போது, வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டாத காங்கிரஸ் கட்சியை கடுமையாக குற்றம் சாட்டி பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசிய போது, “சொந்த மக்கள் மீது அவநம்பிக்கை வைத்து  நாட்டை நடத்த முடியாது. அதற்கு மாறாக அவர்களின் பிரச்சனைகளுக்கு மதிப்பளித்து தீர்வு காண்பதன் மூலமாக நாட்டை இயக்க முடியும் முன்பு வடகிழக்கு அரசியலில் பிளவு இருந்தது.

ஆனால் தற்போது அதை தெய்வீக ஆட்சியாக மாற்றி இருக்கிறோம். பா.ஜனதா கட்சி மக்களை மதம் அல்லது பிராந்தியத்தின் அடிப்படையில் பாகுபடுத்தியதில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாகலாந்தில் அரசியல் தன்மை நிலையற்ற தன்மை இருந்தது. காங்கிரஸ் கட்சி டெல்லியில் இருந்து கொண்டு வட கிழக்கு மாநிலங்களை ரிமோட் மூலம் இயக்கியது. மேலும் டெல்லி முதல் திமாபூர் வரை வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான நிதியை உறிஞ்சியது. அந்த வகையில் வடகிழக்கு மாநிலங்களை ஏ.டி.எம் எந்திரமாகவே காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி உள்ளது. ஆனால் பா.ஜனதாவும் இந்த எட்டு மாநிலங்களை அஷ்டலஷ்மி ஆக பார்த்து வருகிறது.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகளுக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கான கொள்கை “வாக்களியுங்கள், மறந்து விடுங்கள்” என்பதாகும். ஆனால் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாகலாந்து இயக்குவதற்கு அமைதி முன்னேற்றம் மற்றும் செழிப்பு போன்ற மந்திரங்களை ஏற்றுக்கொண்டது. ஆனால் பா ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாகலாந்து இயக்குவதற்கு அமைதி முன்னேற்றம் மற்றும் செழிப்பு போன்ற மந்திரங்களை ஏற்றுக் கொண்டது” என அவர் பேசியுள்ளார்.