சமூக வலைதளங்களில் சமீபத்தில் பகிரப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது. தினந்தோறும் அதிகாலையில் நம் தெருக்களைச் சுத்தப்படுத்தும் தூய்மைப் பணியாளர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் வகையில், பெண் ஒருவர் அவர்களுக்கு அன்புடன் தேநீர் தயாரித்து வழங்கியுள்ளார்.
மேலும் குளிரையும் பாராமல் உழைக்கும் அந்தப் பணியாளர்களுக்கு, ஒரு கோப்பை தேநீர் என்பது வெறும் பானம் மட்டுமல்ல, அது அவர்களின் உழைப்பிற்கு அளிக்கப்பட்ட கௌரவமாகவும், அரவணைப்பாகவும் பார்க்கப்படுகிறது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி அந்தப் பெண் செய்த இந்தச் சிறு உதவி, இணையவாசிகளின் இதயங்களை நெகிழச் செய்துள்ளது.
एक माँ सुबह 7:15 बजे सफाई कर्मचारियों को चाय देने बाहर आती है। उनका यह छोटा-सा काम उन सफाई कर्मियों के दिन में गर्माहट भर देता है।
यह हमें याद दिलाता है कि दयालुता के छोटे काम भी हमारे शहर के लिए मेहनत करने वाले लोगों के लिए बहुत मायने रखते हैं। pic.twitter.com/B30cqey4pm
— JIMMY (@Jimmyy__02) December 12, 2025
“>
இத்தகைய “சிறிய செயல்கள் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்” என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த உதாரணமாகும். ஒரிசா போஸ்ட் மூலம் பகிரப்பட்ட இந்தச் செய்தி, சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள தொழிலாளர்களை நாம் எவ்வாறு கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்பதை நினைவுறுத்துகிறது. வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும், அந்தப் பெண்ணின் பரந்த மனப்பான்மையைப் பாராட்டி வருகின்றன .
இந்நிலையில் நாமும் நம்மைச் சுற்றியுள்ள உழைப்பாளிகளுக்கு இது போன்ற அன்பைச் செலுத்த வேண்டும் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். மனிதாபிமானம் என்பது ஆடம்பரமான செயல்களில் இல்லை, சக மனிதனின் தேவையறிந்து செய்யப்படும் இத்தகைய சிறு உதவிகளில்தான் இருக்கிறது என்பதை இந்த நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
