19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில், ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணியின் சுழற்பந்துவீச்சாளர் குருணால் பாண்டியா, இரண்டு ‘பவுன்சர்’ பந்துகளை வீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதன் மூலம், 2025-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர்களில் அதிக பவுன்சர்களை வீசிய வீரர்களின் பட்டியலில், வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை (32 பவுன்சர்கள்) குருணா ல் பாண்டியா சமன் செய்துள்ளார்.

 

பொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே பேட்ஸ்மேன்களைத் திணறடிக்க பவுன்சர் பந்துகளைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், ஒரு சுழற்பந்துவீச்சாளராக இருந்து கொண்டு, பும்ரா போன்ற ஒரு நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரின் பவுன்சர் எண்ணிக்கையை குருணால் எட்டியிருப்பது கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.