ரஷ்ய நாட்டில் மாஸ்கோ பகுதியில் அந்நாட்டின் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இங்கு இன்று ரஷ்யா அதிபர் புதின் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் உக்ரைன் போர் தொடர்பாகவும் கலாச்சாரம் தொடர்பான விஷயங்களிலும் மேற்கத்திய நாடுகளை கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது “வெளிநாடுகளில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் இயற்கைக்கு எதிரானது.

மேற்கத்திய நாடுகள் குடும்ப அமைப்பு, கலாச்சாரம், வரலாறு போன்றவற்றின் அடையாளத்தை அழிக்கின்றது. அதோடு குழந்தைகள் விவகாரத்தில் பல்வேறு கொடூரங்கள் அரங்கேற்றப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் குடும்பம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு மட்டும்தான். மேலும் பிரார்த்தனை செய்யும் கடவுள்களுக்கு ஆண்பால் அல்லது பெண்பால் பெயர் இல்லாமல் பாலின நடுநிலை பெயர்களை அறிமுகப்படுத்த இங்கிலாந்து தேவாலயம் பரிசீளித்து வருவது முற்றிலும் கண்டிக்கத்தக்க கூடிய விஷயமாகும்” என்று அவர் கூறியுள்ளார்.