முதுநிலை நீட் மதிப்பெண் விவகாரம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு 0 பர்சன்டைல் இருந்தால் போதும் என்ற 21 ஆம் நூற்றாண்டின் ஒரு பைத்தியக்காரத்தனமான அறிவிப்பை தேசிய மருத்துவக் கழகம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சகத்தில் இந்த முடிவை பைத்தியக்காரத்தனம் என்ற விமர்சிப்பதை தவிர வேறு வார்த்தைகள் எதுவும் கிடையாது. நீட் தேர்வை தமிழ்நாட்டில் ஆதரித்த நமக்கே மிகுந்த வேதனை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.